இந்நிலையில் டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான வீட்டை, 10 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என அமலாக்கத்துறை உத்தவிட்டுள்ளது. இவழக்கு தொடர்பாக அவரது பல்வேறு சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லில் உள்ள ஜோர் பாக் என்ற பெயரிலான அவரது வீடு முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் 10 நாட்களுக்குள் வீட்டை காலிசெய்து ஒப்படைக்க வேண்டும் என அமலாக்கத்துறை அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.