ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி இன்று விடுதலை செய்யப்பட்டார் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகியது. ஜம்முகாஷ்மீரில் 370-வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த முப்தி முகமது உள்பட பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இடையில் ஒருசில அரசியல் தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் 14 மாத சிறைவாசத்திற்கு பின் தற்போது மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. மெகபூபா முப்தி விடுதலை செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு அறிவித்துள்ளதை முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காங்கிரஸ் பிரமுகர் குலாம்நபி ஆச்சாத் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கலும் முபதி விடுதலைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.