கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 7,830 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கோவிட் தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,47,76,002 என்றும், நாடு முழுவதும் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 40,215 என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4,692 என்றும், நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 16 பேர் உயிரிழந்தனர் என்றும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.