கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாளை மறுநாள் மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவுள்ளேன். ஒருமுறை ஆதரவு அலையோ, எதிர்ப்பு அலையோ வீசிவிட்டால் அதை மாற்றுவது கடினம். யருடையா அலை வீசுகிறதோ அதில் போகிறவர் தான் ஜெயிக்க முடியுமே அல்லாமல் மற்றவர்கள் ஜெயிக்க முடியாது.
தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிர்ப்பு அலைகள் நிலவியபோதும் கோதாவரி - கிருஷ்ணா - காவிரி ஆகிய நதிகளை இணைப்பது தொடர்பாக நிதின் கட்காரியின் அறிவிப்பு பாராட்டத்தக்கது. நேரு , இந்திரா, கலைஞர் , எம்ஜி ஆர் ஜெயலலிதா ஆகியோர் போல் வலிமையானவர் மோடி என்று அவர் தெரிவித்தார்.