6.5 கோடி இளைஞர்களை ஏமாற்றிய மோடி...? ராகுல்காந்தி குற்றச்சாட்டு

வியாழன், 31 ஜனவரி 2019 (18:57 IST)
நம் இந்திய நாட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டு வரை வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை  6.5 கோடி என்றும் இது தேசிய பேரழிவு என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 456 ஆண்டுகளில் என்றுமில்லாத அளவுக்கு தற்போது 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகத்தில் மதிப்பீட்டின்படி ஜூலை 2017 முதல் , ஜூன் 2018 வரையான காலக்கட்டத்தில் வேலையில்லாதேரின் விகிதம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
 
கடந்த ஆண்டில் 1 கோடியே பத்துலட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர்  பக்கத்தில் கூறியுள்ளதாவது:
 
இதுபற்றி ஒரு வருடத்தில் 2 கோடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என வாக்குறுதி அளித்தனர்.  ஆனால்  ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு குறித்து வந்த அறிக்கையில் ஒரு தேசிய பேரழிவை காட்டுகிறது.  கடந்த 45 ஆண்டுகளில் வேலையில்லாத்திண்டாட்டம் அதிக அளவில் உள்ளது. 2017 - 2018 ஆம் ஆண்டில் மட்டும் 6.5 கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்