பிரதமர் மோடி தனது 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை குஜராத்திலுள்ள சர்தாய் வல்லபாய் பட்டேலின் ”ஒற்றுமையின் சிலை”யை பார்வையிட்டார். பின்பு நர்மதா நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணைக்கு சென்றார். பின்பு அங்கு அந்த அணையின் நீர் வரத்து 136.68 மீட்டர் எட்டிவிட்டதை கொண்டாடும் வகையில் “நமாமி நர்மதா” விழாவில் கலந்து கொண்டார்.
பின்பு குஜராத் மாநிலத்தின் முதல்வர் விஜய் ரூபானியுடன், நர்மதா நதிக்கரைக்குச் சென்று பூஜைகள் செய்தார். அதன் பிறகு நர்மதா நதிக்கரையில் அமைந்திருக்கும் கால்வானி சுற்றுலா பூங்காவிற்கு சென்றார். அங்கே பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
மோடிக்கு காங்கிரஸை சேர்ந்த சோனியா காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.