சந்திரயான் நிலாவுக்கு போனது, சிதம்பரம் மாயமாய் போனார் – ட்ரெண்டாகும் சிதம்பரம் காணவில்லை!
புதன், 21 ஆகஸ்ட் 2019 (17:08 IST)
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குறித்த வழக்கில் அவர் தலைமறைவானது குறித்து நெட்டிசன்கள் இணையத்தில் ஹேஷ்டேகுகளை பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
2007ல் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் இருந்து 350 கோடி ரூபாய் முதலீடு பெறுவதற்கு அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. இதில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள சிதம்பரத்தின் வீட்டையே சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார் ப.சிதம்பரம். ஆனால் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் ப.சிதம்பரம் தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. மும்பையில் உள்ள அவரது இல்லத்திற்கும் சிபிஐ அதிகாரிகள் 4 முறை சென்று பார்த்துவிட்டு திரும்ப வந்துள்ளனர்.
இதனால் ப.சிதம்பரம் தலைமறைவானதாக குறிப்பிடும் #ChidambaramMissing என்ற ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் வைரலாக பரவி வருகின்றன. அதில் நேடிசன்கள் பலர் சிதம்பரத்தை கொண்டல் செய்யும் தோனியிலும் பதிவுகளை இட்டு வருகின்றனர்.
ஒருவர் “சந்திரயான் நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்திருக்கிறது. சிதம்பரம் பூமியின் சுற்று வட்டத்திலிருந்தே மறைந்து விட்டார்” என கூறியுள்ளார்.
அதுபோல மேலும் சிலர் ஃபேஸ் ஆப் மூலம் சிதம்பரத்தின் முகத்தை மாற்றி வெவ்வேறு கெட் அப்புகளில் அவ்ர் இருப்பதுபோல பதிவிட்டுள்ளனர்.
மேலும் ஒருவர் இந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 என்ற படத்தின் புகைப்படத்தை மாற்றி சிபிஐ ஆபிசர்கள் கெட் அப்பில் மோடி, அமித்ஷா ஆகியோர் இருப்பது போலவும் தயார் செய்து இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.
இந்த சம்பவங்களால் தொடர்ந்து சிதம்பரம் குறித்த பதிவுகள் இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் சிலர் சிதம்பரத்துக்கு ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.