உத்தரபிரதேச மாநிலம் பண்டா என்ற மாவட்டத்தைச் சேர்ந்த தினேஷ் திவாரி என்பவர் கடன் வாங்கி வெல்டிங் பட்டறை ஒன்றை அமைத்துள்ளார். அதில் சில தினங்களுக்கு முன்பு புகுந்த மர்மநபர்கள் வெல்டிங் கருவிகள் உள்ளிட்ட அனைத்து கருவிகளையும் திருடி சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த தினேஷ் திவாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்குப் பிறகு தினேஷ் திவாரியின் வீட்டுக்கு அருகிலேயே மூட்டைக்கட்டப்பட்டு திருடிய பொருட்கள் கிடந்துள்ளன. அதனோடு கிடந்த கடிதத்தில் உங்களைப் பற்றி வெளியே விசாரித்து தெரிந்துகொண்டோம். உங்கள் வறுமை அறிந்து மீண்டும் உங்களிடமே பொருட்களை கொடுக்கிறோம். இனிமேல் ஏழைகளின் வீட்டில் திருடமாட்டோம் என எழுதப்பட்டு இருந்தது.