மேலும் மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்காக பல்வேறு ஆய்வு நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். தற்போது அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் சரியாக இல்லை என்றும் பூமியின் சுற்றுப் பாதையில் விண்வெளி ஆய்வு மையம் இருப்பதால் பராமரிப்பு செலவு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார் அதனால் தான் நிலவின் சுற்றுப்பாதையில் ஒரு சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்
நிலவுக்கு செல்வதற்கான நிபுணத்துவத்தை இந்தியா அடைந்து விட்டது என்றும் சந்திராயன் 3 வெற்றி, இருக்கும் வசதிகளை கொண்டு படிப்படியாக திட்டமிடப்பட்டது என்றும் நிலவை மனிதன் கைப்பற்றுவதில் இந்தியாவின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.