ஜி எஸ் டி திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என முதன் முதலில் கூறிய காங்கிரஸும் ஜிஎஸ்டி தவறான முறையில் அவசர கதியில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், வரி விதிப்பு நிலைகள் ஏற்கத்தக்கதாக இல்லை எனவும் கூறி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ப.சிதம்பரம், மன்மோகன் உள்ளிட்டோர் இது தொடர்பாக பாஜக வைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
ஆனால் பிசினஸ் லைன் ஊடகத்தின் சார்பில் ’சேஞ்ச் மேக்கர் ஆஃப் தி இயர்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மத்திய நிதியமைச்சர் அருன் ஜெட்லிக்கு ஜி எஸ் டி யை அமல்படுத்தியதற்காக சேஞ்ச் மேக்கர் ஆஃப் த இயர் என்ற விருதை வழங்கியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. இதனால் காங்கிரஸ் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.