இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு தனது மனைவியை அழைத்துக் கொண்டு கடவலி-வாஷந்த் ரயில் நிலையங்களுக்கிடையே தனது மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தனது மனைவியுடன் செல்பி எடுத்து, தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அவர் அனுப்பினார்.
அப்போது அங்கு ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. அதன்பின் மனைவியை கீழே தள்ளி விட்டு அவர் ஓடும் ரயிலின் முன் பாய்ந்தார். அதில் அவர் உடல் சிதறி பலியானார். தன்னுடைய கண் முன்னாலேயே தனது கணவன் தற்கொலை செய்து கொண்டதால், அதிர்ச்சியில் அவரி மனைவி கதறி அழுதார்.
இறப்பதற்கு முன் விஷால், தன்னுடைய செல்போனில் இருந்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவர் ஒரு ஆடியோ செய்தியை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியுள்ளார். அதில், சச்சின் வெகண்டே மற்றும் அருண் சாத்வி என்ற 2 பேர், அவரை பல வழிகளில், தொல்லை தருவதால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என கூறியிருந்தார்.