விஜய் மல்லையாவின் ரூ.200 கோடி மதிப்பு பங்களா பறிமுதல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதன், 19 ஜனவரி 2022 (10:20 IST)
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூபாய் 200 கோடி மதிப்புள்ள பங்களாவை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய வங்கிகளில் 7000 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி கட்டாமல் லண்டனுக்கு தப்பிச் சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா
இந்த நிலையில் அவருக்கு லண்டனில் சொகுசு பங்களா ஒன்று இருப்பதாகவும் அந்த பங்களாவின் மதிப்பு ரூபாய் 200 கோடி என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் இந்த பங்களாவை அடமானம் வைத்து சுவிஸ் வங்கி ஒன்றில் அவர் கடன் வாங்கியதாகவும் ஆனால் 2017இல் கட்ட வேண்டிய கடனை இன்னும் அவர் கட்டவில்லை என்றும் கூறப்படுகிறது
இதனை அடுத்து அந்த வங்கி தொடுத்த வழக்கின் அடிப்படையில் லண்டனில் உள்ள விஜய் மல்லையாவுக்கு சொந்தமான பங்களாவில் பறிமுதல் செய்ய லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன லண்டன் விஜய் மல்லையா