கேரளா மாநிலம் பத்தினம்திட்டா பகுதியில் இரு பெண்களுக்கு கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக ஒரு பெண்ணை மாவட்ட மருத்துவமனையில் இறக்கிவிட்ட டிரைவர் இரண்டாவது பெண்ணை கோழேச்ஞ்சேரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
செல்லும் வழியில் ஆளிள்ளாத பகுதியில் வண்டியை நிறுத்திய டிரைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பெண் என்றும் பாராமல் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளார். பிறகு தனது செயலுக்காக மன்னிப்பு கேட்ட டிரைவர் அந்த பெண்ணை மருத்துவமனையில் அழைத்து சென்று விட்டுள்ளார். டிரைவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து அந்த பெண் மருத்துவமனையில் புகார் அளித்ததன் பேரில் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது டிரைவர் பணியிலிருந்து நீக்கி சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.