கர்நாடகாவில் திடீரென நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்: என்ன காரணம்?

புதன், 7 ஏப்ரல் 2021 (08:06 IST)
கர்நாடகாவில் திடீரென நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகள்: என்ன காரணம்?
கர்நாடக மாநிலத்தில் திடீரென இன்று காலை முதல் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் 
 
சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு பேருந்து ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று காலை முதல் அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை
 
அரசு பேருந்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் அரசு ஊழியர்களாக தங்களை கருதவேண்டும் என்றும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டே வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் 
 
அப்போது 9 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு வாக்களித்தது. ஆனால் அரசு அளித்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றவில்லை. இதனை அடுத்து இன்று திடீரென கர்நாடக அரசு பேருந்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் அவதி உள்ளனர்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்