இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தமிழகத்தில் திமுக கொடுத்த வாக்குறுதியை இரண்டு ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் உள்ளது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் காங்கிரஸ் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூபாய் 2000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. இந்த நிலையில் தற்போது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் கர்நாடக முதல்வர் சித்தராமையா திணறி வருவதாக கூறப்படுகிறது.
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500, மகளிருக்கு அரசு பேருந்து இலவச பயணம், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம், 10 கிலோ இலவச அரிசி மற்றும் இல்லத்தரசிகளுக்கு மாத ரூ.2000 வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.