சோனியா காந்தி வேடத்தில் நடிக்கும் இத்தாலி நடிகை

வெள்ளி, 6 அக்டோபர் 2017 (00:55 IST)
'ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்' என்ற புத்தகம் நாடு முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த புத்தகம் தற்போது திரைப்படமாகி வருகிறது. மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாற்றை குறிப்பிடும் இந்த திரைப்படத்தில் மன்மோகன்சிங் வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அனுபம்கெர் நடித்து வருகிறார்.



 
 
இதே படத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, அப்துல்கலாம், வாஜ்பாய் போன்றவர்களின் கேரக்டர்களுக்கு நடிக்க நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சோனியா காந்தி கேரக்டருக்கு இத்தாலி நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார். சோனியா காந்தியும் இத்தாலியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் ராகுல்காந்தி வேடத்தில் அயர்லாந்து நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அப்துல்கலாம், வாஜ்பாய் வேடங்களில் நடிக்க நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த படம் 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு ஒருசில மாதங்களுக்கு முன் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்