இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
இந்துக்கள் முஸ்லிம்கள் என்ற பாகுபாடு யாரிடமும் காணக்கூடாது. இப்படிப் பாகுபாடுகள் இருந்தால் நாடு முன்னேறுமா ? சில அரசியல் தலைவர்கள் மக்களிடையே பிரிவை உண்டாக்கி சாதி, மத அடிப்படையில் பிரித்து வைத்துள்ளனர். நாம் ஒற்றுமையாக இருந்தால்தால் நாடு முன்னேறும் அதனால் நாம் நாட்டை நேசிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் எனது நிலத்தை ஆஞ்சிநேயருக்குக் கொடுத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.