காவிரியின் குறுக்கே மேகதாவில் அணைக்கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேகதாதுவில் அணை கட்டினால், டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அணைக்கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே மேகதாதுவில் அனுமதி கேட்டு மத்திய அரசிடம், கர்நாடகா விண்ணப்பித்து உள்ளது. அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கையையும் அளித்து இருந்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், 2 கடிதங்களை ஜல்சக்தி துறைக்கு அனுப்பி இருந்தது.
இந்நிலையில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ், மேகதாது தொடர்பாக கர்நாடகா அனுப்பிய விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டிருந்தது.