உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புக்ராயன் அருகே, இன்று அதிகாலை 3 மணியளவில் ரயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் இதுவரை 96 பேர் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாலை நேரம் என்பதால், பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். விபத்து ஏற்பட்டதும், அவர்கள் அலறியடித்த படி திடுக்கிட்டு எழுந்தனர். 14 பெட்டிகளில் இருந்த பயணிகளில் இதுவரை 96 பேர் பலியாகிவிட்டதாக தகவல்கள் வெளி வந்துள்ளன.
அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. விபத்தில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. அதேபோல், விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்துள்ளார்.