இந்தோனேஷியாவை சேர்ந்தருக்கு பத்மஸ்ரீ விருது! – பத்ம விருது விழாவில் ஆச்சர்யம்!

திங்கள், 8 நவம்பர் 2021 (11:43 IST)
2020 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவருக்கும் விருது அளிக்கப்பட்டுள்ளது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

2020ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் இன்று வழங்கப்படுகின்றன. குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கும் நிலையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது நான்கு பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு இந்தோனேஷியரும் இடம் பெற்றுள்ளார். அகுஸ் இந்த்ர உதயனா என்னும் அவர் தீவிரமான காந்தியவாதி ஆவார். இந்தோனேஷியாவில் காந்திய கொள்கைகளை பரப்புவதிலும், அகிம்சையை வலியுறுத்துவதிலும் தீவிரமாக செயல்பட்ட அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்