உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவரின் குற்றச்சாட்டு: நெட்டிசன்கள் பதிலடி!

வியாழன், 3 மார்ச் 2022 (18:02 IST)
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவரின் குற்றச்சாட்டு: நெட்டிசன்கள் பதிலடி!
உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர் ஒருவர் மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ள நிலையில் அதற்கு நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 
உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்ட மாணவர் ஒருவர் எங்களை வரவேற்க ரோஜாப்பூவை கொடுத்தார்கள் என்றும் இதை வைத்து நாங்கள் என்ன செய்வது என்றும் இதற்கு பதில் அமெரிக்காவை போல் முன்கூட்டியே எச்சரித்து எங்களை வெளியேற்றி இருந்தால் இதற்கு அவசியமே இருக்காது என்றும் குற்றம் சாட்டினார் 
 
அதற்கு பதிலடி கொடுத்துள்ள நெட்டின்கள் போர் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே உக்ரைன் நாட்டிலிருந்து இந்திய மாணவர்கள் வெளியேறுங்கள் என இந்திய அரசு அறிவுறுத்தியது என்பதும் ஆனால் ஒரு மாணவர் கூட இந்திய அரசின் அறிவிப்பை கண்டுகொள்ளவில்லை என்றும் அதனால் ஏற்பட்ட சிக்கல் தான் இது என்றும் கூறிவருகின்றனர் 
 
போர் நடக்கும் சூழலில் மத்திய அரசு உக்ரைன் மற்றும் ரஷ்யா அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி பத்திரமாக மீட்டு கொண்டு வந்ததற்கு நன்றி கூறாவிட்டாலும் பரவால்ல நன்றி கெட்டத்தனமாக பேச வேண்டாம் என்று நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து உள்ளார்கள்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்