இந்தியா சீனா எல்லையில் ராணுவம் குவிப்பு: மீண்டும் அத்துமீறும் சீனா

சனி, 14 மே 2016 (15:23 IST)
4057 கி.மீ நீளம் கொண்ட எல்லையை இந்தியாவும் சீனாவும் பங்கிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் ஒரு வார காலம் சீனா லாடக் பகுதியில் தனது ராணுவத்தை முகாமிட்டது.


 
 
தற்போது சீனா மீண்டும் இந்திய எல்லையில் ராணுவத்தை குவித்து சீண்டி பார்க்கிறது. கடந்த முறை படைகளை குவித்த போது இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. ஆனால் சீனா அதனை கண்டுகொள்ளவில்லை.
 
இந்நிலையில் இந்தியா சீனா எல்லையில் சீனப்படைகள் மிக அதிகமாக குவிக்கப்பட்டு வருவதாக அமெரிக்காவின் பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது. சீனா எதற்காக தனது படைகளை இந்திய எல்லையில் குவிக்கிறது என்பது தெரியவில்லை எனவும் பென்டகன் கூறியுள்ளது.
 
இந்நிலையில் இந்தியா சீனா எல்லையில் படைகள் ராணுவம் குவிக்கப்பட்டு வருவதால் எல்லைப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்