புதுச்சேரியில் பிரபல தொழிலதிபர் திலீப் கபூருக்கு சொந்தமான தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒதியம்பட்டில் உள்ளது. இதை தலைமையிடமாக கொண்டு புதுச்சேரி நகரப்பகுதிகள் மற்றும் அனைத்து விமான நிலையங்களிலும் கைபை, காலனி, ஷூ, பெல்ட், பர்ஸ் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று காலை ஒதியம்பட்டு மற்றும் அரியாங்குப்பத்தில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் புதுச்சேரி நகரில் மிஷன் வீதியில் நான்கு கடைகள், கடற்கரையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதி உள்ளிட்ட 8 க்கும் மேற்பட்ட இடங்களில் 25க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.