சிறந்த சேவை. உலக அளவில் முதலிடம் பெற்ற தென்னிந்திய விமான நிலையம்

செவ்வாய், 7 மார்ச் 2017 (05:06 IST)
விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு சிறப்பன சேவைகளை வழங்குவதில் உலகளவில் சிறந்த விமான நிலையங்கள் எவை எவை என்ற கருத்துக்கணிப்பை சர்வதேச விமான நிலைய கவுன்சில் அமைப்பு ஒன்று எடுத்து வந்தது.





இந்த கருத்துக்கணிப்பின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் பயணிகளுக்கு சிறந்த சேவை வழங்கும் விமான நிலையங்களில் முதல் இடத்தை ஐதராபாத் சர்வதேச விமான நிலையம் தட்டிச் சென்றுள்ளது. ஒன்பது வருடங்களாக செயல்பட்டு வரும் ஐதராபாத் விமானநிலையம் ஆண்டு ஒன்றுக்கு 12 மில்லியன் பயணிகள் வந்து செல்வதற்கான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது.

அதன் பின்னர் 2016-ம் ஆண்டில் 15 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது. இந்நிலையில் சர்வதேச விமான நிலைய கவுன்சில் நடத்திய சிறந்த சேவையை மக்களுக்கு அளிக்கும் விமான நிலையங்களின் தரப்பட்டியலில் அந்த ஐதராபாத் விமான நிலையமானது 5-க்கு 4.9 புள்ளிகள் பெற்று உலகின் முதல் சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை தட்டிச் சென்றிருக்கிறது. தென்னிந்தியாவில் இருக்கும் ஒரு விமான நிலையம் உலக அளவில் பெருமை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐதராபாத் விமான நிலையத்திற்கு  சர்வதேச விமான நிலைய கவுன்சில் டைரக்டர் ஜெனரல் ஏஞ்சலா கிட்டன்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்