கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் உள்ள மருத்துவமனையில்,23 வயது இளைஞர் ஒருவர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தற்போது நிபாவைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.அவர் தனது சக மாணவர்கள் 22 பேருடன் கல்விப்பயிற்சிகாக திருச்சூருக்குச் சென்ற போது இந்தக் காய்ச்சல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.இந்நிலையில் மற்ற மாணவர்கலுக்கும் மருத்துவ சோதனை நடைபெற்றுவருகிறது.