நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் கொரோனா தாக்கம் உள்ள பகுதிகள் எவையெவை என கண்டறிவதற்காகவும், மக்கள் அவற்றை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளவும் “ஆரோக்ய சேது” என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ஆரோக்ய சேது செயலியை கண்டிப்பாக தங்கள் மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலகம் புறப்படும் முன் ஆரோக்ய சேது செயலியில் சோதனையிட வேண்டுமென்றும், அதில் மிதமானது அல்லது அதிக அபாயம் என்று காட்டினால் அலுவலகம் வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.