ராஜீவ் காந்திக்கு வழங்கப்பட்ட பாரத் ரத்னாவை திரும்ப பெரும் தீர்மானம் : டெல்லி மேல் சபையில் நிறைவேற்றம்

சனி, 22 டிசம்பர் 2018 (07:34 IST)
சில நாட்களுக்கு முன் டெல்லி உயர் நீதி மன்ற தீர்ப்பில் காங்கிரஸ் எம்பி சஜ்ஜன் குமார் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் வழங்கிய பரிந்துரையில் இந்தியாவின் உள்ளூர் மற்றும் குற்ற  சட்டங்களுக்கு மனிதகுலத்திற்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை குற்றங்களை சேர்க்க வேண்டும் எனறு பரிந்துரை செய்துள்ளனர்.
 
இந்நிலையில்  டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சியின் எம். எல்.ஏ ஜர்னைல் சிங்  நேற்று தீர்மானம் ஒன்று கொண்டு வந்தார். அதில் நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை டெல்லி அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தி கூறுதல் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் தொடர்ந்து சீக்கியப்படுகொலை நடத்தப்பட்டுள்ளது.  அதனால் ராஜிவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னாவை திரும்ப பெற வேண்டும் என டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த அவரது மூத்த மகன் ராஜிவ் காந்திக்கு அவரது மறைவுக்குப் பின் கடந்த 1991 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்