ஏடிஎம் மிஷினுக்கு பதிலாக பாஸ்புக் மிஷினை திருடி சென்ற கோமாளி திருடர்கள்

வியாழன், 1 செப்டம்பர் 2016 (16:53 IST)
ஏடிஎம் மிஷின் என நினைத்து பாஸ்புக் அச்சடிக்கும் மிஷினை தூக்கிச் சென்ற கோமாளி திருடர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.



அசாமில்தான் இந்த கூத்து நடந்துள்ளது. சம்பவத்தன்று இரவு நான்கு கொள்ளையர்கள் சேர்ந்து ஏடிஎம் எந்திரத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி  கௌகாத்தி எனும் இடத்தில் உள்ள பினோவாநகர் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி கிளைக்கு காரில் சென்றுள்ளனர்.

அங்கு இருந்த பாஸ்புக் அச்சடிக்கும் மிஷினை, ஏ.டி.எம் மிஷின் என நினைத்து அவர்கள் நால்வரும் தூக்கி தங்களின் காருக்குள் போட்டு கடத்திச் சென்றனர்.

அந்த பகுதி வழியாக ரோந்து வந்த போலீசார், அவர்களின் கார் எண்ணை பார்த்து சந்தேகம் அடைந்து, அவர்களின் பின்னாலேயே சென்று அவர்களை மடக்கி பிடித்துள்ளனர். அதன் பின்னர்தான் காரின் உள்ளே அந்த மிஷின் இருப்பது தெரியவந்துள்ளது. அதன் பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதில் என்ன வேடிக்கை என்றால், போலீசாரிடம் பிடிபட்ட பின்புதான், அந்த எந்திரம் ஏ.டி.எம் இல்லை என்பது அவர்களுக்கு தெரிய வந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்