கற்பை சூரையாடிய தந்தை; சித்தியும் உடந்தை... மனமுடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு

திங்கள், 29 ஜூன் 2020 (11:34 IST)
இளம்பெண் ஒருவரை தந்தையே கற்பழித்ததால் மனமுடைந்த அந்த பெண் கெமிக்கலை குடித்து மருத்துவமனையில் சீரியஸாக உள்ளார். 
 
பெங்களூருவின் ஹரலூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு காய்ச்சல் இருந்த காரணத்தால் வீட்டில் மருந்து கேட்டுள்ளார். அப்போது அந்த பெண்ணின் தந்தை தூக்க மாத்திரைகளை கொடுத்து அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளான். 
 
தான் கற்பழிக்கப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இது குறித்து சித்தியிடம் (தந்தையின் 2வது மனைவி) கூற, அவர் இதனை கண்டுக்கொள்ளாததால் மனமுடைந்து பாத்ரூம் கெமிக்கலை குடித்து காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். 
 
பெண்ணின் நிலை உணர்ந்த காவலர்கள் உடனடியாக அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் தந்தையை கைது செய்து சித்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த பெண்ணின் உடல்நிலை கவலைகிடமாக உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்