கர்நாடக முன்னாள் அமைச்சர் மகள் திருமணம் : எல்.சி.டி திரையில் திருமணப் பத்திரிக்கை

புதன், 19 அக்டோபர் 2016 (18:25 IST)
கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டி தனது மகளின் திருமண பத்திரிக்கையை வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.


 

 
கர்நாடகாவில் சுரங்கத் தொழிலில் கொடி கட்டி பறப்பவர் ஜனார்த்தன் ரெட்டி. இவர், சட்ட விரோத சுரங்க வழக்கில் கைதாகி 3 வருடம் சிறையில் இருந்துள்ளார்.  இவரின் மகள் ப்ராமினி திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. அதற்காக பெட்டி வடிவில் ஒரு திருமண பத்திரிக்கை தாயாரிக்கப்பட்டுள்ளது. அதை திறந்தால் அதனுள் இருக்கும் திரையில், தானாகவே ஒரு வீடியோ ஓட ஆரம்பிக்கிறது.


 

 
அதில் ஒரு பாடல் ஒலிக்க, ஜனார்த்தன ரெட்டி, அவரின் மனைவி, மகள் மற்றும் வருங்கால மருமகன் ஆகியோர் பாட்டு பாடி நடித்துள்ளனர். 
 
ஒரு நிமிடம் ஓடும் இந்த வீடியோவில் அவர்கள், திருமணத்திற்கு அனைவரையும் வரவேற்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பிரத்யோக அரங்கு அமைத்து வீடியோ எடுத்துள்ளார்களாம். பார்ப்பதற்கு ஒரு சினிமா பாடல் காட்சி போல் அமைந்துள்ளது அந்த வீடியோ. 
 
கர்நாடக பெரும் புள்ளிகளை ஆச்சர்யப்படுத்திய அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...
 

வெப்துனியாவைப் படிக்கவும்