நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது முதலாகவே கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, உணவு பொருட்களுக்கு ஜிஎஸ்டி போன்றவற்றை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தின.
இந்நிலையில் இன்றும் மக்களவை கூட்டத்தில் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்டவற்றிற்கு எதிராக எதிர்கட்சி எம்,.பிக்கள் அமளி செய்த நிலையில் திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், கிரிராஜன், கனிமொழி சோமு உள்பட 11 எம்.பி.க்கள் இந்த வாரம் முழுவதும் அவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.