பக்தர்கள் வருகை அதிகரிப்பு: சபரிமலை ஐயப்பன் தேவஸ்தானம் அதிரடி முடிவு!

சனி, 1 ஜனவரி 2022 (07:53 IST)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதை அடுத்து ஐயப்பன் கோவில் தேவஸ்தானம் அதிரடி முடிவை எடுத்துள்ளது 
 
கடந்த சில நாட்களாக கேரளாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து ஐயப்பனை தரிசிக்க கேரளாவில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருப்பதால் தரிசன நேரம் மேலும் ஒரு மணிநேரம் நீட்டிக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து கோயில் நடை இரவு 11 மணிக்கு நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்