சபரிமலை: தேவசம் போர்டு உச்ச நீதிமன்றத்தை அணுக முடிவு

வெள்ளி, 19 அக்டோபர் 2018 (16:58 IST)
சபரிமலை கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டதை கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.  
 
இன்று சபரிமலைக்கு சென்ற ஐதராபாத்தை சேர்ந்த செய்தியாளர் கவிதா என்பரும் அவருடன் சென்ற பெண்ணியவாதி ரஹானா பாத்திமா என்பவரும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.   
 
இவர்களை திருப்பி அனுப்பும்படி தேவசம் போர்டு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, கேரள அரசும் இரு பெண்களை சன்னதிக்குள் செல்ல விடாமல் திருப்பி அனுப்புமாரு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கேரள அரசு தேவசம் போர்டு இதுகுறித்து முடிவு எடுக்கலாம் என அறிவித்திருந்தது. 
 
இந்நிலையில், இது குறித்து தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தற்போது பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது பின்வருமாறு, சபரிமலையின் இன்று நடைபெற்ற நிகழ்வுகளை உச்சநீதிமன்றத்திடம் சொல்வோம். இதனை ஒரு அறிக்கையாக சம்ர்பிக்க உள்ளோம். 
 
திருவாங்கூர் தேவ்சம் போர்டு எப்போதும் தங்களது பாரம்பரியத்தை விட்டு கொடுக்காது. மேலும், வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து விரைவில் இந்த தீர்ப்பில் மறுசீராய்வு செய்யப்படும். தேவசம் போர்டின் முடிவிற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்