பின்பு அம்மனுக்களை விசாரித்த டெல்லி பாட்டியாலா நீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரை தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்தும், குற்றவாளிகளை தனி தனியாக தூக்கிலிட வேண்டும் எனவும், மத்திய அரசு மற்றும் திகார் சிறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், பாட்டியாலா நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய மறுத்துவிட்டது, மேலும் 4 குற்றவாளிகளையும் தனி தனியே தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துவிட்டது.