இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள நிலையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் மத்திய அரசை கேட்டுக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக 20 பேர் உயிரிழந்து விட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து உச்சநீதிமன்றத்தை நாடியுள்ள டெல்லி அரசு “டெல்லி மருத்துவமனைகளுக்கு தங்கு தடையின்றி ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், 480 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில் டெல்லி மிகப்பெரும் சீரழிவை சந்திக்கும்” என்றும் கவலை தெரிவித்துள்ளது.