தாவூத் இப்ராஹிம் பங்களாவை ஏலம் விட மத்திய அரசு முடிவு..ஏலம் எடுக்க போவது யார்?

சனி, 23 டிசம்பர் 2023 (17:32 IST)
தாவுத் இப்ராஹிமுக்கு சொந்தமான சொத்துக்களை மத்திய அரசு ஏலம் விட முடிவு செய்திருக்கும் நிலையில் அந்த சொத்துக்களை ஏலம் எடுப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.  

மும்பை தொடர் குண்டு வெடிப்பில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகவும் அவரை விஷம் வைத்து கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தாவூத் இப்ராஹிம் சொந்த ஊர் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ரத்னகிரி மாவட்டத்தில் இருக்கும் நிலையில் அங்கு அவருக்கு  சொந்தமான குடும்ப சொத்துக்கள் ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்டது.

இந்த நிலையில் இன்னும் சில சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ள நிலையில்  மீண்டும் அந்த சொத்துக்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.  பங்களா, மாந்தோப்பு உட்பட நான்கு சொத்துக்களை ஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்றும் ஜனவரி 5ஆம் தேதி இந்த ஏலம் நடைபெறும் என்றும் இந்த சொத்துக்களை ஏலத்தில் எடுப்பது யார் என்பது குறித்த தகவல்  தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்