ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் தளபதி புர்ஹான் வானி உட்பட மூன்று பேர், கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனால் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியின் 10 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால் கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவை அடியோடி பாதிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் சில இடங்களில் உத்தரவு தளர்த்தப்பட்டது. இதையடுத்து காஷ்மீரில் இயல்பு நிலை மெல்ல திரும்பிக் கொண்டிருந்தது.