இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து, ஓய்ந்துள்ள நிலையில் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
மூன்றாம் அலை பரவலுக்கு வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்து வரும் சூழலில், மூன்றாம் அலையினால் குழந்தைகள் அதிகம் பாதிக்கபட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆம், ஆக்டோபர் மாதம் வரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தரவுகளின் படி 1 - 10 வயதுடைய குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அதாவது மார்ச்சில் மொத்த கோவிட் பாதிப்புகளில் 2.80% ஆக இருந்த குழந்தைகள் பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்ட்டில் 7.04% ஆக அதிகரித்துள்ளது. முன்பை விட இப்போது கொரோனா பாதிப்பினால் குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.