உச்சத்தை எட்டும் கொரோனா: 5 லட்சத்தை தொட்ட பாதிப்பு எண்ணிக்கை!

சனி, 27 ஜூன் 2020 (10:43 IST)
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 18,552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஐந்து லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒரே நாளில் 18,552 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,08,953 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,95,881 ஆகவும்,  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15,685 ஆகவும் உயர்வு. 
 
அதிகப்பட்சமாக மகாராஷ்டிராவில் 1,52,765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 79,815 ஆக உயர்வு. உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,106 ஆக உயர்வு. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்