கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 55,079 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,02,742 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 876 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலியானவர்கள் எண்ணிக்கை 51,797 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,937 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 19.77 லட்சமாக உயர்ந்துள்ளது.