ஆனால் இந்த குற்றச்சாட்டை நீதிபதி ரஞ்சன் கோகாய் முழுதாக மறுத்து கூறியதாவது :
‘என் மீது குற்றஞ்சாட்டிய பெண்ணுக்கு பின்னால் மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அவர் பாலியல் புகார் அடிப்படை ஆதாரமற்றது. நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விஷயத்தில் ஊடகங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இதனால் நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளதாவது:
தலைமை நீதிபதியை பாலியல் புகாரில் சிக்கவைக்க மிகப்பெரிய சதி என வழக்கறிஞர் உத்சவ் பெய்ன்ஸ் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் புகாரில் சதி உள்ளதா என ஏ.கே. பட்நாயக் குழு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.