நீட் தேர்வுகள் உள்பட பல்வேறு தேர்வுகளில் வினாத்தாள் கசிந்து வருவது கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாகி வருகிறது என்பதும் குறிப்பாக டெக்னாலஜி அதிகரித்ததன் காரணமாக மிக எளிதாக வினாத்தாள் கசிந்து விடுகிறது என்பதும் அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்தும் வினாத்தாள் கசிவதை நிறுத்த முடியவில்லை என்றும் குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.
இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நடைபெற்றது என்பதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை என்றும் பாட்னா மற்றும் அதனை சுற்றியுள்ள ஒரு சில மையங்களில் மட்டுமே முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்றும் அதனை தடுக்க மத்திய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.