பிரதமரின் மெளனத்தை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்.. காங்கிரஸ் அறிவிப்பு..!
ஞாயிறு, 5 பிப்ரவரி 2023 (16:42 IST)
அதானி பிரச்சனை குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வரும் பிரதமர் மோடியை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் நண்பர் என்று கூறப்படும் அதானி, முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் வெளியான நிலையில் இது குறித்து எந்த ஒரு விசாரணையும் நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மோடி மௌனம் காத்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
இதனை கண்டித்து நாளை நாடு தழுவிய போராட்டம் நடத்த போவதாகவும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.