ஷீரடியில் இருந்து மும்பைக்கு சென்ற வந்தே பாரத் ரயிலில், ஒரு பயணிக்கு அளிக்கப்பட்ட இரவு உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பயணி உணவின் தரம் குறித்து, இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்தார்.
இந்நிலையில், உணவில் உயிருடன் கரப்பான் பூச்சி இருப்பது தொடர்பான புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ரயில்வே துறையின் இந்த அலட்சியப் போக்கிற்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.