திரிபுராவில் 60 இடங்களுக்கான சட்டசபை தேர்தல் நடைபெற்ற நிலையில் இதில் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அங்கு முதலமைச்சராக இருந்த மாணிக் சகா மீண்டும் முதலமைச்சர் ஆக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முதலமைச்சர் பதவிக்கு மேலும் இரண்டு பேர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
மானிக் சகாவை முதலமைச்சர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு பிப்லாப் என்பவரை முதலமைச்சர் ஆக தேர்வு செய்ய வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலமைச்சரை தேர்வு செய்ததற்காக ஒரு குழுவை பாஜக மேலிடம் திரிபுராவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்கள் பாஜக எம்எல்ஏக்களுடன் ஒருமித்த கருத்துடன் புதிய முதல்வரை தேர்வு செய்ய முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பாஜக மேலிடம் மாணிக் சகாவுக்கு தான் ஆதரவாக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளன.