9 மணி நேரத்திற்கு முன்பே கரையை கடந்தது சிட்ரங் புயல்: 9 பேர் பலி
செவ்வாய், 25 அக்டோபர் 2022 (08:00 IST)
வங்க கடலில் உருவாகி இருந்த சிட்ரங் புயல் எதிர்பார்த்ததற்கு முன்பே கரையை கடந்து விட்டது என்றும் இந்த புயல் காரணமாக 9 பேர் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்ககடலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தோன்றிய காற்றழுத்த தாழ்வு அதன் பின்னர் காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறியது என்பதை பார்த்தோம்.
சிட்ரங் என பெயர் வைக்கப்பட்ட இந்தப் புயல் இன்று வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 மணி நேரத்திற்கு முன்பாகவே நேற்று இரவு வங்கதேசத்தில் சிட்ரங் புயல் கரையை கடந்தது
இதன் காரணமாக பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட வங்கதேசத்தில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சிட்ரங் புயல் கரையை கடந்ததால் தமிழகம் உள்பட பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.