ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பயணத்தைத் விண்கலம் மதியம் சரியாக 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோமநாத் திட்டமிட்டபடி வெண்கலம் பூமியிலிருந்து அதன் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது என்றும் சந்திராயன் 3 தனது நிலவை நோக்கி பயணத்தை தொடங்கிவிட்டது என்றும் இனி எல்லாம் சரியாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டு உள்ளதை அடுத்து பிரதமர் மோடி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் அவர் இது குறித்து கூறியதாவது: சந்திரயான்-3 விண்வெளியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது, ஒவ்வொரு இந்தியனின் கனவுகளும், லட்சியங்களும் உயரமாக ,பறக்கிறது, இந்த சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்று; அர்ப்பணிப்புடன் செயல்பட்ட விஞ்ஞானிகளுக்கு தலைவணங்குகிறேன்"