விரிவாக்கப்பட்ட மத்திய அமைச்சரவை! பொறுப்புகள் என்ன? – இன்று மாலை அமைச்சரவை கூட்டம்!
வியாழன், 8 ஜூலை 2021 (09:12 IST)
மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சகங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.
மத்திய அமைச்சரவையை நிர்வாக வசதி காரணமாக விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தின் எல்.முருகன் உட்பட 43 புதிய அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்பாக பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் புதிய அமைச்சகங்கள் மற்றும் அமைச்சர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டமும், அதன் பின்னர் 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டமும் நடைபெற உள்ளது.