சிறார்களுக்கு 2வது டோஸ்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!

புதன், 2 பிப்ரவரி 2022 (13:05 IST)
15 -18 வயதினருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம். 

 
கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து சிறுவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர். அதன்படி 15 முதல் 18 வயதுள்ளவர்களுக்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் 15 -18 வயதினருக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 15-18  வயதினருக்கான கோவாக்சின் தடுப்பூசியை 28 நாட்கள் இடைவெளியில் 2வது டோஸ் போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜனவரி 31 முதல் 15-18 வயதினருக்கு 2வது டோஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்