தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,34,154 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,84,41,986 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 2,887 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 3,37,989 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,63,90,584 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 17,13,413 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை இந்தியா முழுவதும் 22,10,43,693 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 23 கோடிக்கும் அதிகமான டோஸ்கள், மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளனவாம். இவற்றில் 21 கோடியே 71 லட்சத்து 44 ஆயிரத்து 22 தடுப்பூசி டோஸ்கள் பயன்படுத்தப்பட்டு விட்டன.